மாளிகாவத்தை – ஜயந்த வீரசேகர மாவத்தையில் நேற்று (06) நபரொருவர் இரும்புக் குழாய்களால் தாக்கி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் காயமடைந்த மாளிகாவத்தையை சேர்ந்த 44 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவி வந்த விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Exit mobile version