கடூழிய சிறைத் தண்டனைக்கு உட்பட்டவர்களை வைத்துள்ள புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் இருந்து ஐந்து கைபேசிகள், கைபேசி சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறைச்சாலையின் விசேட பிரிவின் நுழைவாயிலுக்கு அருகாமையில் பூமிக்கு அடியில் புதையுண்டு காணப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version