மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக்கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகிறது.

எனவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version