கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று குரேஷியா மற்றும் பிரேஸில் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், குரேஷியா அணி, 3-1 என்ற பெனால்டி சூட்-அவுட் முறையில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ராஸ் அபு அபவுத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் தென்கொரியா அணியும் மோதின.

இப்போட்டியில், பிரேஸில் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

எதிர்வரும் 9ஆம் திகதி எடிவுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், குரேஷியா அணியும் பிரேஸில் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Share.
Exit mobile version