எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது முட்டையின் விலை 50 முதல் 60 ரூபா வரையில் இருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் நிலையில் இந்த விலை உயரும் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version