ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள காஸ்பியன் கடற்பகுதியில் சுமார் 2,500 சீல்ஸ் (கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் சுமார் 700 இறந்த சீல்ஸ் பதிவாகியிருந்தன, ஆனால் மேலதிக விசாரணையில் அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

காஸ்பியன் சீல்ஸ்கள் 2008ஆம் ஆண்டு முதல் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காஸ்பியன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஜார் காபிசோவ் ஒரு அறிக்கையில், இவை இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று கூறினார்.

விலங்குகள் கொல்லப்பட்டதாகவோ அல்லது மீன்பிடி வலையில் சிக்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.

நிபுணர்கள் சீல்ஸ்களின் மாதிரிகளை சேகரித்துள்ளனர், மேலும் ஆய்வக முடிவுகள் வந்தவுடன் இறப்புக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக அதிக வேட்டையாடுதல் மற்றும் தொழில்துறை மாசுபாட்டால் காஸ்பியன் கடலின் சீல்ஸ்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

காஸ்பியன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருந்த எண்ணிக்கை தற்போது 70,000ஆகக் குறைந்துள்ளது.

Share.
Exit mobile version