மொரட்டுவை-லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4ஆவது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Exit mobile version