(அப்துல்லாஹ்)
கல்முனை சாஹிபு வீதியில் அமைந்திருக்கும் ஹுஸைனியா ஹிட்ஸ் பாலர் பாடசாலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழிவுப் பொருட்களை கொண்டு பாலர்காலும் பெற்றோர்களாலும் உருவாக்கப்பட்ட ஆக்கங்களின் கண்காட்சி இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.நஸ்ரின் தலைமையில் சித்திரப் பாட ஆசிரியரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம்.றம்ஸானின் வழிகாட்டலில் நடைபெற்றது
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாகவும் முன்பள்ளி பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றஸின் கௌரவ அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர் சித்தி ரஹ்மா, குடும்ப நல உத்தியோகத்தர்களான த.கயல்விழி , திருமதி எஸ்.கணேசமூர்த்தி, தொழிலதிபர் ஏ.ஏ.பிர்தௌஸ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப் பாடசாலையில் கல்வி கற்கும் 75 மாணவர்களுக்கும் இலவசமாக உணவு சமூர்த்தி மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.