அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version