ரஷ்யாவிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் அதியுயர் விலையை நிர்ணயம் செய்துள்ளது.
ஒரு பீப்பாய் 60 டொலர் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் மிகவும் குறைந்த விலைக்கு மசகு எண்ணெய் வாங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஜி 7 நாடுகள் அமைப்பின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியமும் தன்னை இணைத்துக் கொண்டது.
திங்கட்கிழமை முதல் இந்த விலை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.