இந்தியாவின் இந்தூர், பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் வைத்தியசாலை அருகே வசிக்கும் அலோக் மோடி. என்பவர் பொலிஸ் நிலையத்தில் சேவல் மீது முறையாடு அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

எனது அயல் வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,அலோக் மோடியின் முறைப்பாட்டை உறுதிபடுத்திய பலாசியா பொலிஸ் நிலைய பொறுப்பாளர், இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Share.
Exit mobile version