ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்ததில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் உள்துறை மற்றும் இராணுவ அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நேற்று மேட்ரிட் நகருக்கு வெளியே உள்ள ஜாரகோசா நகரில் விமானப்படை தளத்தில் கடித வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிற்சாலையில்தான் கையெறி குண்டு லோஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.

உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடித வெடிகுண்டும், விமானப்படை தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடித வெடிகுண்டும் ஒரே நபரால் அனுப்பப்பட்டது என தெரிய வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share.
Exit mobile version