சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version