இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (8 இலட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாவை வைத்திருக்க இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில்இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

டெ்ாலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதில் இருந்து மீள இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாயை வெளிநாட்டு பணமாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (8 இலட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம். இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதற்காக வங்கிகளில் ‘இந்திய ரூபாய்க்கான என்.ஆர்.எப்.சி கணக்குகளை’ தொடங்க இந்திய வங்கியுடன் இலங்கை வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version