பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பதவியை திங்கட்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே பிரதமர் இல்லத்தைவிட்டு வெளியேறிய ராஜபக்க்ஷ குடும்பத்தினர் கடற்படை தளத்திற்கு நேற்று வந்தனர். தொடர்ந்து, கடற்படை தளத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

கடற்படை தளத்திலிருந்து மஹிந்த ராஜபக்க்ஷ, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதை உயர் ஆணையம் கவனித்து வருகின்றது.இந்த தகவல்கள் அனைத்து தவறானவை. இதில், எந்தவித உண்மைகளும் இல்லை. இந்த செய்திகளை உயர் ஆணையம் கடுமையாக மறுக்கின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version