வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்று திங்கட்கிழமை நவம்பர் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

வெளிவிவகார அமைச்சுக்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் ஆகிய அமைச்சுக்களின் செலவினம் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 புதன்கிழமை அன்று ஆரம்பமானது.

கடந்த சனிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதம் இடம்பெற்றது.

குழுநிலை விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெறும் என்பதோடு இறுதிநாள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Share.
Exit mobile version