கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலையின் பாடசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப் பட்ட ஊரின் தனவந்தர்களின் உதவியினால் பாடசாலையில் சேதமடைந்து காணப்பட்ட தளபாடங்களை மீண்டும் சீரமைத்து புதிய தளபாடமாக மாற்றி அதனைபாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று(25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்,பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எல்.எல்.ஏ ஹமீட், பழைய மாணவ சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரிமற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை அல் பஹ்ரியா பாடசாலையின் பெளதீகவள அபிவிருத்தி நடவடிக்கைகளின் அதிபரோடு இணைந்து பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share.
Exit mobile version