முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதனை குறைக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்த முடியும் என்றும் முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த தாம் ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என்றும் எல்லை நிர்ணயத்தை முன்னெடுக்காமல் தேர்தலை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.