ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தனிப்பட்ட ஒருவரின் இலாபத்திற்காக தடை செய்யபட்ட பொருள் என்று அறிந்தும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மாபெரும் குற்றமாகும். கடுமையான தண்டனைகள் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகளை முற்றிலும் இல்லாமொழிக்க முடியும்.

பாதுகாப்பு பொது செயலாளரின் இந்த அறிவிப்பானது வரவேற்தக்க விடயமாகும். நாட்டில் 22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வாறான கடுமையான தண்டனைகள் ஊடவே இளைய சமுதாயத்தினரை சரியான பாதைக்கிட்டு செல்ல முடியும் எனவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சியின் இச்செயற்பாடு வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version