கட்டாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நேற்று நடைபெற்ற குழு – எச் பிரிவுக்கான லீக் போட்டியில் போர்த்துகல், கானா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இந்நிலையில், 5 உலகக் கிண்ணத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

Share.
Exit mobile version