மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான பொய்யான அறிக்கையை வெளியிடும் போது, ​​எல்லா இடங்களிலும் அதனை உண்மையென அறிவிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் எனது சம்பளம் மாதம் 4 இலட்சம் ரூபா மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version