8-வது T 20 உலககிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றயது.. அந்தவகையில் 9-வது T 20 உலகக்கிண்ணத் தொடரை மேற்கிந்திய தீவுகள் , அமெரிக்கா நாடுகள் இணைந்து 2024-ம் ஆண்டில் நடத்தவுள்ளன.

முந்தைய இரு உலகக்கிண்ணப் போட்டிகள் முதல் சுற்று, அதன் பிறகு சூப்பர்12 சுற்று, அரைஇறுதி, இறுதிப்போட்டி என்ற முறையில் நடத்தப்பட்டன. ஆனால் 2024-ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியல் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

இந்த போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் முடிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version