குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைக்கவுள்ளார்.

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு காணொளி முறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால், இவ்விரு மாநிலங்கள் தவிர்த்து நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Share.
Exit mobile version