நடப்பு FIFA உலகக் கிண்ண தொடரின் குரூப் “B” சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாராமாக விளையாடி 6-2 என்ற கோல்கள் அடிப்படையில் ஈரானை இலகுவாக வெற்றிகொண்டது.

போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் பெலிங்காம் முதலாவது கோல் அடித்தார். பின்னர் 43ஆவது நிமிடத்தில் சகாவும், 45 நிமிடங்களுக்கு பின்னர் மேலதிக நேரத்தில் முதலாவது நிமிடத்தில் ஸ்டர்லிங் கோல் அடித்து அசத்தினார். அதற்கமைய, இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதனையடுத்து, இரண்டாவது பாதியில் 62, 71, 89ஆவது நிமிடங்களில் இங்கிலாந்து கோல் மழை பொழியவே, மறுமுனையில் ஈரான் அணியால் 65ஆவது நிமிடத்திலும் 90 நிமிடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஒரு கோல் மாத்திரம் பெற்று 6-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version