ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அட்டைகளை வழங்கும் இலக்கை அடையும் வரை மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 1,700 அட்டைகளை அச்சிடும் திறன் திணைக்களத்துக்கு உள்ளதால், ஒரு நாள் சேவையில் 50 அட்டைகளையும் 1650 அட்டைகளை 6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்காகவும் அச்சிடவுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம் அட்டைகள் கிடைத்துள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (14) முதல் அட்டைகளை அச்சிட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share.
Exit mobile version