2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்தமை தொடர்பில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்ட நிலையிலேயே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version