பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதகாவும் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீ விபத்து குறித்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியானது காசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Exit mobile version