கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், பாலம் ஒன்று உடைந்துள்ளமையினால் இவ்வாறு குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பாலத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version