போலந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையால் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து உக்ரைன் போர் அண்டை நாடுகளில் பரவக்கூடும் என்று உலகளாவிய எச்சரிக்கை எழுப்பப்பட்டது.
போலந்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சு, உக்ரைன் வான் பாதுகாப்பு ஏவுகணையால் ஏற்பட்டிருக்கலாம் என்று நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.
எனினும் போரைத் தொடங்கியதால் இறுதியில் ரஷ்யாவே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று நேட்டோவின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ரஷ்யா அதனை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது,
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது.அதன் முடிவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். இது திட்டமிட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான எந்த அறிகுறியும் தங்களிடம் இல்லை.
மேலும் நேட்டோவுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராகி வருகின்றது என்பதற்கான எந்த அறிகுறியும் தங்களிடம் இல்லை என்றும் நேட்டோவின் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.