நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சாதாரண முறையின் கீழ் வாகனங்களை பதிவு செய்ய 2,000 ரூபாய் கட்டணமும் முன்னுரிமை அடிப்படையிலான கட்டணம் 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஒருநாள் சேவையின் கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாயாகவும் தாமதமாகி செலுத்தப்படும் பதிவுக் கட்டணங்கள் பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்படவுள்ளன.
அவ்வாறு தாமதக்கட்டணமாக மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாயும், உந்துருளிக்கு 50 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட வாகனச் சான்றிதழின் விவரங்களை மாற்றுவதற்கு 3,000 கட்டணம் வசூலிக்கப்படும்.