தமது வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவர்கள் மூவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி தண்டனை வழங்கினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மில்லனிய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா வழக்கை ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.