எரிபொருள் பெற்று தருவதாக ஊரவர்களிடம் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் , பெட்ரோல் , மண்ணெண்ணெய் , டீசல் என்பவற்றை பெற்றுத்தருவதாக பலரிடம் பெரும் தொகையான பணம் வாங்கியதாக பணம் கொடுத்தவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.