ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (14) காலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
அந்த கூட்டத்திற்கு பின்னர், அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இந்த வாரத்தில் மேலும் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.