பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (13) இடம்பெறவுள்ள ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தை அதிகரிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

எனினும் இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் மெல்போர்னில் மழை பெய்ய 100% வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் திங்கட் கிழமை மேலதிக தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதும், அன்றைய தினமும் அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வழங்கப்படும் மேலதிக நேரத்தை 4 மணி நேரமாக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதிப் போட்டியில், இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும், இன்றைய இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கிட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டால் நாளைய தினம் இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி ஆரம்பிக்கப்படும்.

மேலதிக நாளிலும் மழை குறுக்கிட்டால் டி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்படும்.

Share.
Exit mobile version