கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை (13) 8 மிணித்தியாலம் 30 நிமிடங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Share.
Exit mobile version