வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து அழித்துள்ளது.

இதேவேளை அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளது.

மேலும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் வருவதால் இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version