லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனம் , இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
லாப்ஸ் காஸ் சிலிண்டர்கள் நிறுவனத்தின் சொத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் லாஃப்ஸ் காஸ் பிஎல்சியின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி சிலிண்டரை சேகரிக்கவோ, விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது தோற்றத்தை மாற்றவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை அறிந்தால், 1345 என்ற ஹொட்லைன் மூலம் லாப்ஸ் காஸ் பிஎல்சிக்கு தெரிவிக்குமாறு நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.