கர்நாடக மாநிலத்தில் நடந்த ஆசிரியர் தகுதி விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக குறித்த அனுமதி அட்டையில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.. மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக இணையத்தில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரீட்சை அனுமதி அட்டை சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது.