அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில், சாலியவெவ கலாவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version