காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) உரையாற்றவுள்ளார்.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார்.

இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மன்றம் மற்றும் உலகத் தலைவர்கள் மன்றம் ஆகியவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

நேற்று எகிப்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.

தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version