அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டார்.
மேலும் பொலிஸாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் ,பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

Share.
Exit mobile version