ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் எலான் மஸ்க்கினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7. 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று ஒரேநாளில் பணிநீக்கம் செய்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ட்விட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒருநாளைக்கு 32 கோடி இந்திய ரூபாயை இழக்கும் போது வேறுவழியில்லை. நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாத ஊதியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவிகிதம் அதிகமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.