சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாlட்டிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்துக் கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.
நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த அந்த கிளி, அவரது ஒரு காதில் இருந்த இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?v=ub9cKqDl11w&feature=emb_imp_woyt