கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து நூதன முறையில் கடத்திச் சென்ற ரூ.46 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க திணைக்கள அதிகாரிகள், குறித்த சம்பவத்துடன் தொர்புடைய இலங்கை இளைஞரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன்போது சுங்க திணைக்கள அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்யதனர்.

இதன்போது அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அவரிடம் இருந்த டிராலி சூட்கேசில் ஜிப் பகுதியில் தையல் போடப்பட்டதுபோல் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள், அந்த தையலை பிரித்து பார்த்த போது அதில் தங்கத்தை கம்பிபோல் மாற்றி சூட்கேசுக்குள் மறைந்து நூதன முறையில் கடத்தியமை தெரியவந்துள்ளது. ரூ.46 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், குறித்த இளைஞரை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version