இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனடிப்படையில் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் பின்வரும் விலை நிர்ணய அடிப்படையில் விற்பனை செய்யப்படுக்கின்றன,

1kg கரட் 420 ரூபாய்
1kg போஞ்சி 520 ரூபாய்
1kg கோவா 360 ரூபாய்
1kg கத்தரிக்காய் 400 ரூபாய்
1kg பூசணி 280 ரூபாய்
1kg பச்சை மிளகாய் 400 ரூபாய்
1kg தேசிக்காய் 800 ரூபாய்
1kg தக்காளி 440 ரூபாய்

Share.
Exit mobile version