ஈரானில் கடந்த 6 வாரங்களாக இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளதோடு 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் தெரிவிக்கையில்,

“கடந்த 6 வாரங்களாக ஈரானில் இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Share.
Exit mobile version