இலங்கையில் குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் சனத்தொகையில் 26 வீதத்திற்கு சமம் எனவும் 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தயாரிக்க இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் 11 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 871 குடும்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version