நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசுபிக் பொருளாதார சமூக ஆணையத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகத்தின் தலைவர் மிகிகோ தனகா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிய அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய அவர், தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version