பெரிய வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில், பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, பேலியகொட மானிங் சந்தையில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கேரட் கிலோ ரூ.420, பீன்ஸ் கிலோ ரூ.520, முட்டைகோஸ் ரூ.360, கத்தரிக்காய் கிலோ ரூ.400, பூசணி கிலோ ரூ.280, பச்சை. மிளகாய் கிலோ ரூ.400 ஆகவும், எலுமிச்சம் பழம் கிலோ ரூ.800 ஆகவும், தக்காளி கிலோ ரூ.440 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.