கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வறுமை காரணமாக வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இடைவிலகல் வீதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வடமாகாணத்தில் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 485 மாணவர்கள், 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதன் பின்னர், பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு வெவ்வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டில் 105 ஆகக் குறைந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியுள்ளதாக கல்விப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.